சமீபத்தியவை
பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1 ஏன் எழுதுகிறேன்.. பிள்ளைக் கனியமுதே இந்த கோடையில்…
பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1 ஏன் எழுதுகிறேன்.. பிள்ளைக் கனியமுதே இந்த கோடையில்…
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

தர்மராஜ் பெரியசாமி By தர்மராஜ் பெரியசாமி
1 week ago
A A
0
Dharmaraj Periyasamy Kavithaikal

அன்பே 

நன்றி கெட்டவனேயென நீயெனைச்

சொன்னாலும் தகும்

அசமந்தமாய் இருந்துவிட்டேன்

பிழைப்பின் அசதிகளில் கொஞ்சம் 

உன் கைகளைப் பற்றியிருக்க வேண்டும் 

ஆதரவான மொழிகளை

அளாவியிருக்க வேண்டும் 

உன் துயரங்களின் தீவிரம் குறித்து 

ஆராய்ந்திருக்க வேண்டும்

ஆயினும் எப்படித் தகவமைத்துக் கொண்டாய் 

உன்னை நீரிலும் நிலத்திலும் வாழும் 

ஓர் அரியவகை உயிரினமாக 

எங்கிருந்து பெற்றாய்

அன்புக்குரியவர்களின் அழைப்புகளிடம் 

முகத்தைத் துடைத்துக்கொண்டே 

ஒன்றுமில்லையெனும் லாகவத்தை.

தனது தாய்க்கோளின் தொடர்பறுந்த 

விண்வெளி வீரனாய் 

இப்படியொரு ஐம்பரிமாண வெளியில் 

சிக்கிக்கொள்ள என்னால் இயலாது

ஒருபடி மேலே சென்று ஸ்டெதாஸ்கோப்பை 

நெஞ்சில் வைத்து எங்கள் இதயத்துடிப்பை 

ஆராய்கிற மருத்துவரானாய்

நடுநடுங்கினோம் ஊசியெதுவும் வேண்டாமென 

இனி 

வேதனை தரும் எந்தப் பிணிகளும்

எமை நெருங்காது 

என் நன்றியுணர்ச்சி மேலிடுகிறது 

இன்னும் புலராத அதிகாலைப் பொழுதில்

நீயும் பிள்ளைகளும் ஆழ்ந்துறங்கும் வேளை 

அடர்ந்த வனத்தினுள் அமைதியான 

நீர்வெளியில் மிதக்கும் ஒற்றைப் படகு 

அதில் மல்லாந்திருக்கும் தனியன் 

காண்பது வெண்ணொளியில் மினுக்கும் 

பலகோடி நட்சத்திரங்களை

இந்தக் காட்சியைப் பார்க்கும் 

யாராவது கேட்டுவிடக் கூடும்

இவனுக்கென்ன இப்படியொரு ஆனந்தம்.

இதற்கெல்லாம் விசுவாசமாய் 

என்னால் என்ன செய்துவிட முடியும்

வானுக்கும் பூமிக்குமாய் அந்தரத்தில் 

ஆழ்மனதில் ஒரு தூளி செய்வேன்

கால் நோகும்போதெல்லாம் 

நீயதில் அமர்ந்து கைகளை விரித்து  

வான் நோக்கிப் போய் வரலாம்

உன் பிள்ளைப்பருவத்தின் 

சில ஞாபகங்களை 

பறித்து வரலாம்.

இதுவரையிலும் சொன்னதில்லை

இப்போது உன் பின் காதுமடலில் 

முத்தமிட்டுச் சொல்கிறேன்

அவ்வப்போது நீ கேட்காமலேயே 

நானுன் கால்களைப் பிடித்துவிடுவது 

உனக்கு நன்றி சொல்லிவிடுகிற 

என் பிரயத்தனமாகத்தான்.

கோரிக்கை

பிறழ்ந்த சொல்லுக்காக

மகன் நாக்கில் சூடு வைப்பேன் என்கிறாள்

நடுங்குகின்றன என் முக்காலங்களும்

அப்படியொன்றும் பெரும்பிழையில்லை

இதற்கே இப்படியொரு தண்டனையெனில்

என்னவாகும் என் கதி

மகனைப் பின்னிழுத்து

முந்திக்கொண்டு போய் நின்றேன்

எனக்கடுத்து அம்மா அப்பா

நண்பர்கள் உறவினர்களென

தானாக நீண்டது வரிசை

சேதி வாய்மொழியாகப் பரவி

கட்டுக்கடங்காமல் முண்டியது கூட்டம்

யார் யாரோ வந்தனர்

ஊர்க்காவலர்கள் ஆட்சியாளர்கள்

நீதியாளர்கள்

இதற்கெல்லாம் என்னால்

ஒருபோதும் பொறுப்பேற்கவியலாது

எதிர்ப்படும் எவர் கண்களையும்

நேர்கொண்டு பார்க்க முடியவில்லை

நம் முகத்தை நாமே காணச் சகிக்கவில்லை

காலத்தின் பிரதிபலிப்பில்

சட்டெனத் திரும்பிக் கொள்கிறோம்

பற்றிக்கொள்கிற கரங்களை

வெடுக்கென உதறிவிடுகிறோம்.

ரம்பப்பற்களில் ஏதோ ஒரு பல் மட்டும்

அதீதமாய் அறுக்கிறது

உள்ளிருந்து கசிவது குற்றம்

வெளியிருந்து பெருகுவது கண்ணீர்

நீள்கிற நேரம் வெம்புகிறது பிறகு ஒழுகுகிறது

எளிதில் கிடைத்துவிடுவதில்லை நிம்மதி

அல்லது அது போலான ஏதோவொன்றாவது

காத்திருக்க வேண்டும் சாகும் வரை

சில நேரம் செத்த பின்பும்.

அதோ வருகிறாள் என் தலைவி

நன்கு பழுக்கக் காய்ச்சிய கம்பியுடன்

அம்மையே உன்னிடம் ஒரு கோரிக்கை

இறுதித் தீர்ப்பு வரும்போது வரட்டும்

இப்போதைக்கு

நன்றாக ஒன்று இழுத்துவிடு

எல்லோருக்கும்

உறைக்கட்டும்.

வருந்துகிறோம்

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிக்காக

அழகுநயம் கொண்டவொரு புகைப்படத்தைத்

தெரிவு செய்பவர்கள் நிச்சயம்

கலைநேர்த்தி மிகுந்த கலைஞர்கள்

ஆயினும் சுவரொட்டிக்குள் எங்களால்

நெடுநேரம் சிரிக்க முடியவில்லை

வருந்துகிறோம்.

சத்தியத்திலும் சத்தியமாக உளமார

வருந்துகிறோம்

கிடங்குகளில் உள்ள அணுகுண்டுகளுக்காக

வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகளுக்காக

துப்பாக்கிகளுக்காக

அதனின்று சீறும் தோட்டாக்களுக்காக

தெறித்து விழும் ரவைகளுக்காக

மலைச்சிக்கரங்களின் பிளவுகளுக்காக

இடிபாடுகளின் நசுங்குதல்களுக்காக

ஓஸோன் படலத்தின் துளைகளுக்காக

பனிப்பாறைகளின் உருகுதல்களுக்காக

கடற்பேரலையின் கேவல்களுக்காக

மழைவெள்ளங்களின் ஊடுருவல்களுக்காக

காலநிலைகளின் மாறுவேடங்களுக்காக

நாற்றுகளின் வறட்சிக்காக

ரத்தச்சோகைகளின் சிவப்பணுக்களுக்காக

ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளின் ஆழத்திற்காக

எந்திரங்களின் பற்சக்கரங்களுக்காக

கொலைவாட்களின் கூர்முனைகளுக்காக

அவமானங்களின் கொடுஞ்சொற்களுக்காக

காதலின் இறைஞ்சுதல்களுக்காக

ஆதரவான ஒரேயொரு வார்த்தைக்காக

இயல்பாய்ப் போன மனப்பிறழ்வுகளுக்காக

இல்லாது போன ஒரு மடிக்காக

தூக்குக்கயிறுகளின் பின்னல்களுக்காக

மின்விசிறிகளின் றெக்கைகளுக்காக

பிணந்திண்ணிக் கழுகுகளுக்காக

மற்றும்

உங்களுக்காக

வருந்துகிறோம்.

அதனால்தான் எங்கள் மிருதுவான

உடல்களை

அதனுள்ளிருக்கும் மெலிதான

ஆன்மாக்களை

எல்லோருக்குமாக

சரிவிகிதத்தில் பக்குவமாகப்

பசியாறக் கொடுத்தோம்.

கொடுத்திருக்கிறோம்.

Previous Post

அணில்களின் குரலில் பேசுபவன்

Next Post

கூர் சீவுதல்

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். மனித உறவுகள், சமூக அவதானிப்புகள், அன்றாட வாழ்வின் முரண்கள், அதன் நுண்ணுணர்வுகள் மற்றும் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களைத் தனது கவிதைகளின் வழியாகப் பதிவு செய்து வருகிறார். இவரது கவிதைகள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியாகியுள்ளன. திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது பணி நிமித்தமாக கத்தாரில் வசித்து வருகிறார்.

Next Post
Koor Seevuthal

கூர் சீவுதல்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.


Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 7, 2026
Ean Ezhuthugiren

ஏன் எழுதுகிறேன்..

October 7, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

Pudhiya Kaalaniagal

புதிய காலணிகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026
Ean Ezhuthugiren

ஏன் எழுதுகிறேன்..

October 7, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 7, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ்கள் (18)
  • படைப்புகள் (18)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 7, 2026
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 7, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு